படை வீரர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பரிந்துரைக்கப்பட்டபோதும் முப்படையினரை விசாரிக்காதது ஏன்?: முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஒஸ்ரின் கேள்வி.

51

பொலிஸ் மற்றும் முப்படையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை முப்படையினர் யாராவது விசாரிக்கப்பட்டுள்ளார்களா? என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் ஆஜரான இவர், இந்தக் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு குற்றம் இழைத்தவர்களை தண்டிக்குமாறு முன்னரும் ஆணை குழுக்களில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஆயினும், இன்று வரை முப்படைகளையும் சேர்ந்த எத்தனை பேர் விசாரணைக் உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்? என ஒஸ்ரின் பெர்னாண்டோ சாட்சியமளிக்கும் போது கேள்வி எழுப்பி உள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக் குழு முன்னிலைப்படுத்தி வருகிறது. கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தில், ஆணைக்குழு முன் ஆஜரான ஒஸ்ரின் பெர்னாண்டோ, தர்ஷ்மன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணக்க ஆணைக்குழு உள்ளடங்களாக கடந்த காலங்களில் இயங்கிய ஆணை குழுக்களின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள், உண்மையை கண்டறிவதிலும் நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதிலும் இலங்கை அரசாங்கம் அடைந்த தோல்வி, உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒஸ்ரின் பெர்னாண்டோ கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Join Our WhatsApp Group