** தரைத்தளத்தில் இருக்கும் பொருட்கள் முதலாம் மாடிக்கு மாற்றம்
** மண் மூடைகளை அடுக்கி பாதுகாப்பு அரணமைக்கும் படை வீரர்கள்
தொடரும் சீரற்ற கால நிலையினால் பாராளுமன்ற கட்டிடத் தொகுதி அமைந்திருக்கின்ற தியவன்ன ஓயாவின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பதாக தெரிய வருகிறது. இதனால், பாராளுமன்ற வளாகத்தினுள் நீர் போகக்கூடிய சாத்தியம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருக்கும் இராணுவத்தினர் மண் மூடைகளை அடக்கி நீர் புகாத வகையில் அரண்களை அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தொடர்ச்சியாக மழை எதிர்பார்க்கப்படுவதால், தியவன்ன ஓயாவின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பாராளுமன்றத்தின் தரைத்தளத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி முதலாவது மாடிக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தெரிய வருகிறது. போலீஸ், இராணுவம், போலீஸ் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.