சுமார் 70 லட்சம் ரூபாய் நிலுவை : ரூபவாஹினி கூட்டத்தாபனத்தில் மின்சாரம் துண்டிப்பு

58

சுமார் 70 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இன்று (17) பிற்பகல் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், அலைவரிசைகளின் தொடர்ச்சியான செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதாகவும் மின்பிறப்பாக்கிகள் மூலம் ஒளிபரப்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாக மின் கட்டணத்தை செலுத்த ரூபவாஹினி தவறி இருந்ததாகவும், சுமார் 90 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. என்றாலும், ஒளிபரப்புகள் இடையூறுகள் இன்றி நடத்தப்பட்டன.

Join Our WhatsApp Group