இலங்கை மாணவர்கள் 396 பேருக்கு பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்

0
60

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழுவினால் நேற்றுமுன்தினம் ( 15) BMICH இல் ஏற்பாடு செய்யப்பட விழாவில் 2022 ஆண்டுக்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாகிஸ்தான்  உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபாரூக் பர்கி கருத்துத் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையத்தின் மூலம் பாகிஸ்தான் அரசு வழங்கும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் குறித்து விளக்கமளித்தார். மேலும், இதன் போது 2022 ஆண்டுக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டுக்கான தெரிவில் 1200 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 396 பேர் இந்த புலமைபரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி ஆணையத்தின் குழுவால் மேற்கொள்ளப்பட்ட பரீட்சைகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் முன்னைய கல்வி மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில்  தேர்வு முறை இடம்பெற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூன் – ஜூலை மாதங்களில் கொழும்பு, கண்டி, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பரீட்ச்சைகள் நடத்தப்பட்டன. உயர் ஸ்தானிகர்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்நிகழ்வானது, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவினை, குறிப்பாக இரு நாட்டு இளைஞர்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் மற்றொரு படியாகும் என குறிப்பிட்டார். இந் நிகழ்விற்கு இலங்கைக்கு பிரத்யேகமாக விஜயம் செய்த கலாநிதி ஷைஸ்தா சொஹைல் தலைமையிலான உயர்கல்வி ஆணைக்குழுவின் குழுவை உயர் ஸ்தானிகர் அன்புடன் வரவேற்றதோடு இந்த நிகழ்வை நடாத்துவதற்கு மாத்திரமன்றி முழு நிகழ்ச்சித்திட்டத்திற்குமான  அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
உயர் ஸ்தானிகர் இந்த புலமைப்பரிசிலுக்கு பெயரிடப்பட்டுள்ள ஆளுமை குறித்து  ஒரு சுருக்கமான அறிமுகத்தையும் வழங்கினார்.

கிழக்கின் கவிஞர்” என்ற பட்டத்தை பெற்றுள்ள அல்லாமா முஹம்மது இக்பால் ஒரு கவிஞர், தத்துவவாதி, வழக்கறிஞர், அரசியல் தலைவர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கல்வியாளர்.  மேலும் முஹம்மது இக்பால் ஒரு தெற்காசிய முஸ்லிம் எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி ஆவார். அவருடைய உருது மொழியில் உள்ள கவிதைகள் 20 ஆம் நூற்றாண்டின் மிகப் சிறந்த கவிதைகளாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் முஸ்லிம்களுக்கான கலாச்சார மற்றும் அரசியல் இலட்சியத்தின் அவரது பார்வை, பாகிஸ்தான் நாடு உருவாவதற்கான  உத்வேகத்தை உயிர்ப்பிப்பதாக இருந்தது . இவரின் கல்வித் தத்துவம் நவீன மற்றும் பண்டைய சிந்தனைகளின் கலவையாக முக்கிய அடையாளங்களைக் கொண்டுள்ளது.   1947 இல் குவைத்-இ-ஆசம் முகமது அலி ஜின்னாவின் முயற்சியால் அவரது இந்த கனவு பின்னர் பாகிஸ்தான் வடிவத்தில் உருவானது.

சுமார் 18.4 மில்லியன் டொலர்கள் மூலதனச் செலவில் 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட பாகிஸ்தான்-இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கண்ணோட்டம் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 800 முழு நிதியுதவி மற்றும் 200 பகுதி நிதியுதவியுடன் கூடிய அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்கு BS, MS மற்றும் PhD மட்டங்களில் அனைத்துத் துறைகளிலும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 237 இலங்கை மாணவர்கள் தற்போது பாகிஸ்தானில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த வருடம் மேலும் 243 மாணவர்கள் இந்த புலமைப்பரிசிளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  இத் திட்டத்தின் ஏனைய அம்சம்களாக பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆசிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்கான மையம் ஒன்றை நிறுவுதல், பொது நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் 50 இலங்கை அதிகாரிகளுக்கு குறுகிய பயிற்சி வழங்குதல், இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 05 பாகிஸ்தான் கல்வி கண்காட்சி நடத்துதல், ஆராய்ச்சி கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்க 50 இலங்கை/பாகிஸ்தானி பல்கலை கழக உறுப்பினர்களை பாகிஸ்தான்/இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை அடங்கும். இந்த புலமைப்பரிசில் இலங்கை மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களுக்கிடையில் அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உயர்தர பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வாய்ப்பை பெறுகின்றனர். மேலும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் அதன் கலாச்சார விழுமியங்களை, தலைமைத்துவ திறன்களைப் பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் சக பாகிஸ்தானிய மாணவர்களுக்கு தங்கள் சொந்த நாடு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி அறியவும் உதவுகிறார்கள். அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் என்பது சர்வதேச மாணவர்களை பாகிஸ்தானில் கல்வி கற்க ஊக்குவிக்கும் உயர் கல்வி ஆணையத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த புலமைப்பரிசிளுக்கு  விண்ணப்பிக்க பெண் மாணவர்கள் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.  இந்த புலமைப்பரிசில் திட்டமானது மதம், சாதி, பாலினம் போன்ற  எந்தப் அம்சத்தையும் பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கை மாணவர்களும் வழங்கப்படுகிறது.

உயர் ஸ்தானிகர் தனது இறுதி உரையில், பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு சார்பாக  இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கும்  என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இலங்கை அரசாங்க அதிகாரிகள், பாகிஸ்தானின் நலன் விரும்பிகள் , அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது பெற்றவர்களின் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்