அஹுங்கல்ல துப்பாக்கி சூடு: பொலிஸ் கமாண்டோ சாஜன்ட் உட்பட இருவர் கைது.

0
28

** கிளி நொச்சி கமாண்டோ பிரிவு துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டதாக தகவல்

அஹுங்கல்ல நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 41 வயதான கமாண்டோ பிரிவின் சார்ஜென்ட் எனவும், கொலையை செய்வதற்கு T56 துப்பாக்கியை வழங்கியவர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி முகாம் இரண்டாம் கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த T56 – 2612651 ரக துப்பாக்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் நேற்று (16) கடமையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மெல்சிறிபுர பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை, இது தொடர்பான துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றைய சந்தேக நபர் 41 வயதுடைய மேகத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்