அமெரிக்காவின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கியதால் கோட்டபாய பதவி துறந்தார் : விமல் வீர வன்ச.

0
48

அமெரிக்காவின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கியதால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசியம் சூழ்ச்சியால் பதவி துறந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வெகுவிரைவில் நெருக்கடிக்குள்ளாவார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது
பொருளாதார நெருக்கடி அரசியல் ரீதியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவிடம் பலமுறை எடுத்துரைத்தோம்.பொதுஜன பெர முன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக விளைவுகளை முன்கூட்டியதாக எடுத்துரைத்த நாங்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டோம். மேற்குலக நாடுகளின் கட்டளைகளுக்கு அடிப ணியப் போவதில்லை எனக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இறுதியில் அமெரிக்காவின் ஆலோசனைக்கமைய செயற்பட ஆரம்பித்தார்.

இறுதியில் மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவிவிலக நேரிட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவின் கட்டளைக்கமைய செயற்படுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத் துழைப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமே பொருளாதார மீட்சிக் கான இறுதித் தீர்வாக அமையும் என அவர் குறிப்பிடுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய வரி அதிகரிப்பு வீதம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கிடை தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு போதும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்காது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களைப் பொருளாதாரப நெருக்கடிக்குள்ளாக்கி, மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி தேசிய பலவீனப்படுத்தும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்