மிக மோசமான காலநிலை : 56 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் உயிர் இழப்பு

22

தொடரும் சீரற்ற காலநி லையினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து இருக்கின்றார்கள் என அனைத்து முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் 11 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இந்த நிலையம் அறிவித்திருக்கிறது. இந்த மோசமான நிலையில், இதுவரை மூவர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதே நேரம், 13,902 குடும்பங்களைச் சேர்ந்த
55,450 பேர் இடம்பெயர் ந்திருக்கின்றார்கள்.
இவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Join Our WhatsApp Group