நாவலப்பிட்டியில் மஹிந்தவுக்கு எதிராக போராட்டம் – 10 பேர் கைது

0
59

( கிஷாந்தன் )
 
நாலலப்பிட்டியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடததப்பட்டதையடுத்து  ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் உட்பட 10 கைத செய்யப்பட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “ஒன்றாக எழுவோம்” என்ற தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் நாவலப்பிட்டியில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்ற பொழுது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஐக்கிய மக்கள் சக்தியினரால் குறித்த எதிர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
இதனையடுத்து சசங்க சம்பத் சஞ்சீவ  உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை ,நாவலப்பிட்டிய நகருக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்