சுதந்திரம், ஜனநாயகத்தில் சமரசம் செய்யமாட்டோம்: சீனாவுக்கு தைவான் பதிலடி

14

தைபே: சீன தேசிய மாநாட்டில் தைவான் குறித்து ஜி ஜின்பிங் பேசியதற்கு தைவான் பதிலடி அளித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் நடந்தது.

மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, “தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவான் பிரச்சினையில் சீன மக்கள் தான் தீர்வு காண வேண்டும். சீன அரசு ஒருபோதும் பலத்தைப் பிரயோகப்படுத்த தயங்காது. தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். அதீத முயற்சிகளுடன் உண்மையான வழியில் இணைப்பை சாத்தியப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சீன அதிபரின் பேச்சுக்கு தைவான் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தைவான் அதன் இறையாண்மையில் பின்வாங்காது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் சமரசம் செய்யாது. தைவான் சுதந்திரமான நாடு. போரை சந்திப்பது தைவானின் விருப்பம் அல்ல. இதுதான் தைவானின் மக்களின் ஒருமித்த கருத்து” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group