இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணம் செய்த வாகனம் விபத்து : ஒருவர் படுகாயம்

27

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. புத்தளம் நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் மற்ற வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளானவர் புத்தளம் திலடியா பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

Join Our WhatsApp Group