** இந்த வீட்டிலிருந்து டியூசனுக்கு சென்ற மற்றொரு மகன் உயிர் தப்பினார்
வரகாபொல மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 24 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மகனுடைய சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவில் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் இந்தப் பெண்ணின் இரண்டாவது மகன் மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்ற வேளையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவன் தற்போது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.