வரக்காபொல, தும்பாலியத்த பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்கியிருந்த 48 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளது.
மண் மேட்டின் கீழ் சிக்கியுள்ள மூவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை (14) ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, நேற்று ஆண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந் நிலையில், மேலும் மூவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணின் 24 வயது மகனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.