புத்தளம் மாரவில பகுதியில் இன்று சனிக்கிழமை (15) காலை சந்தேகத்துக்கிடமான முறையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
குறித்த காரில் கள்ளச்சாராயம் கடத்தப்பட்டது தெரியவந்ததை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த காரில் இருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் சட்டவிரோத மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளன.