கிளிநொச்சி – முகமாலை பகுதியில் A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்றுடன் டிப்பர் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.