தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் கலவான மற்றும் எஹலியகொட பிரதேச செயலகங்களுக்கு 3 ஆம் நிலை (சிவப்பு) அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தின் தொடங்கொட, ஹொரண, பண்டாரகம, மில்லனிய, மத்துகம, அகலவத்த, களுத்துறை, ருவன்வெல்ல, வரகாபொல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலகங்களுக்கும், குருவிட்ட, அயகம, நிவித்திகல, இரத்தினபுரி, எல். இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலகங்களுக்கும் குறித்த எச்சரிக்கை விக்கப்பட்டுள்ளது.