களனி கங்கையின் நீர் மட்டமும் பெருக்கெடுக்கும் மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, அடுத்த 3 தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்கு களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, வத்தளை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே ஆகிய பகுதிகளில் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.