வங்களா விரிகுடாக்கடலில் நேற்று (14) இந்தியா ஏவிய அனைத்து அணுவாயுத ஏவுகணைகளும் குறித்த இலக்குகளில் வீழ்ந்து வெடித்தன. மும்பை கடற்படைத் தளத்தில் இப்பரீ ட்சிப்பு நடந்தது. அணுசக்தியில் இயங்கும் உலகின் முதற்தர நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான “விக்ரன்ற்” நீர்மூழ்கியிலிரு ந்து இவை,ஏவப்பட்டன.சுமார் 3500 கிலோமீற்றர் (2174 மைல்) வீச்செல் லை வரை,இந்த ஏவுகணைகள் சீறி வெடித்தன.சொந்த தயாரிப்பில் இந்தி யா இந்த ஏவுகணைகளை ஏவியது. இதனால்,ஐந்து வல்லரசுகளுக்கு அடுத்து அணுசக்தியுள்ள ஆறாவது நாடாக இந்தியா தன்னை அடையா ளம் காட்டியுள்ளது.
முதற்தடவையாக 2009 இல்,இந்தியா அணுவாயுத ஆற்றலை வளர்க்கத் தொடங்கியது.இந்த வளர்ச்சியின் அடுத்த முனையில்,கடந்த செப்டம் பரில் வானில் போரிடும் ஹெலிகொ ப்டர்களையும் “எரிஹென்ற்”இந்தியா களத்தில் இறக்கியது.ஹிமாச்சல் பிரதேசத்தில் சீனாவின் அத்துமீறலை அழிக்கும் நோக்கில் இந்த ஹெலி கொப்டர்கள் பாவிக்கப்படலாம்.