6 கடற்படை வீரர்களுடன் கடற்படை கப்பல் மாயம்: தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

46

கடல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கப்பல் ஒன்று காணாமல் போய் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் ஆறு கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் படகுகள் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்த கப்பல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொழுது, தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தொடர்பு துண்டித்து காணாமல் போயிருக்கும் இந்த கப்பலை கண்டுபிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இதற்காக, கடப்படையின் விசேட பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

Join Our WhatsApp Group