வரக்காபொல
வீடொன்றின் மீது நிலச்சரிவு; சிக்கிய 4 பேரில் ஒருவர் மீட்பு

0
19
  • ஏனையோரை மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு. வரக்காபொல, தும்பலியத்த பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்குண்ட 4 பேரில் 3 பேரை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
  • தற்போது நிலவும் கடும் மழை காரணமாக, இன்றையதினம் (14) அகுருவெல்ல – வரக்காபொல வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு மாடி வீடொன்றில் சிக்கியிருந்த நால்வரை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

இதில் ஒருவர் (தந்தை) மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலச்சரிவினால் வீடு முற்றாக இடிந்துள்ள நிலையில், வரக்காபொல பொலிஸாரும் கிராம மக்களும் இராணுவத்தினருக்கு ஆதரவாக வீட்டினுள் இருந்த ஏனையவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பெருமழையையும் பொருட்படுத்தாமல் முன்னெடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்