யாழ் கோட்டை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் செயல் திட்டம் இன்று காலை ஆரம்பம்.

42

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்  இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் யாழ்.கோட்டை பகுதியில் இன்று (14) வெள்ளி காலை 7.30 மணியளவில்  ஆரம்பித்தது.

இதன் மூலம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவடி க்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், யாழ்.பிரதேச செயலகப் பணியாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், இளையோர் அமைப்புக்கள் என பலரும் இணைந்துள்ளனர்.

Join Our WhatsApp Group