முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 164 ரன்கள் இலக்கு.

60

முத்தரப்பு 20 ஓவர்க் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கான்வே 14 ரன்னுக்கும், ஆலன் 12 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.

இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. இதில் பிலிப்ஸ் 29 ரன்னுக்கும், வில்லியம்சன் 59 ரன்னுக்கும், சாம்பன் 25 ரன்னுக்கும், நீஷம் 17 ரன்னுக்கும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் நஷீம் ஷா, ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட்டும், சதாப் கான், நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியுள்ளது.

Join Our WhatsApp Group