எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாவலப்பிட்டியில் பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து வெளியேறிய பின்னர் மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் இரண்டாவது மக்கள் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.