புதிய அட்டையை பெற ரூ.200; திருத்தம் மேற்கொள்ள ரூ.500; தொலைந்த பிரதிக்கு ரூ.1,000 நவம்பர் 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுமககள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடுத்துள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நவம்பர் 01 முதல் புதிய தேசிய அடையாள அட்டையை பெற ரூ.200 திருத்தம் மேற்கொள்ள ரூ.500 (தொலைந்தமைக்காக) இணை பிரதியை பெற ரூ.1,000 கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன.
தற்போதுள்ள கட்டணங்கள்- புதிய தேசிய அடையாள அட்டையை பெற ரூ.100, திருத்தம் மேற்கொள்ள ரூ. 250 (தொலைந்தமைக்காக) இணை பிரதியை பெற ரூ.500.