** காலி கராப்பிட்டிய ஆஸ்பத்திரியில் சம்பவம்.
தந்தை மகனுக்கு ஏற்றிய ஊசி மருந்து ஒவ்வாமையினால் மகன் உயிரிழந்த சம்பவம் காலி வலப்பன பிரதேசத்தில் நேற்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 25 வயது உடைய மகனே உயிரிழந்துள்ளார். ஓய்வு பெற்ற தாதி உத்தியோகத்தர் ஒருவர், தனது மகனுக்கு உடல் வலி ஏற்பட்ட பொழுது, ஊசி மருந்தை ஏற்றி இருக்கிறார். இது ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. ஆனால், தவறான மருந்து ஏற்றப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
25 வயது உடைய இந்த இளைஞனுக்கு உடல் வலி அடிக்கடி ஏற்படுகின்ற பொழுது, தனது ஓய்வு பெற்ற தாதி தந்தையே ஊசி மருந்து ஏற்றுவது வழக்கமாகி இருந்திருக்கிறது. என்றாலும், இந்த ஒவ்வாமை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஊசி மருந்து எட்டியவன் பாதைக்கு உள்ளான இளைஞன், காலில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்திருக்கிறார்.
என்றாலும், ஆஸ்பத்திரியில் மரண விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பே, இளைஞனின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. முறையான அனுமதி பெறாமல் சடலம் ஆஸ்பத்திரிக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக காலி கராப்பிட்டி வைத்திய சாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.