ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போது முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருக்கும் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.