இன்றும் மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்.

34

இன்று(14) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Join Our WhatsApp Group