62-வது படத்தில் நடிக்க தயாராகும் அஜித்.

56

அஜித்குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து தற்போது முடிவடைந்துள்ளது. இதில் நாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

1987-ம் ஆண்டு பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் 15 கொள்ளையர்கள் போலீஸ் சீருடையில் சென்று வங்கியில் இருந்து ரூ.36 கோடியை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இந்தியா முழுவதும் பரப்பாக பேசப்பட்டது.

இதனை திரைக்கதையாக்கி துணிவு படத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

அஜித்குமார் தற்போது தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இதில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

Join Our WhatsApp Group