மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை. அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்ட போகுமாறு மக்கள் பணிக்கவில்லை. இவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
ஆனால் பாராளுமன்றத்தில் உரிய முறையில் தெரிவு இடம்பெறும் போது அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்தியகூறு காணப்படுகிறது.எனினும் தற்போதுள்ள பிரதமருக்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றோம் என்றார்.
திறப்பு விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.