பொன்னியின் செல்வன் ரூ.450 கோடி வசூல் சாதனை

47

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படம் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.200 கோடி வசூலித்தது.

7 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டியது தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் ரூ.124 கோடி வசூலித்தது. தற்போதைய நிலவரப்படி பொன்னியின் செல்வன் வெளியாகி 12 நாட்களில் ரூ.450 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் நல்ல வசூல் பார்த்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

Join Our WhatsApp Group