நிலவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் உலகின் முதல் விண்வெளி சுற்றுலா பயணி.

61

நியூயார்க்: விண்வெளி சுற்றுலாவின் ஒரு பகுதியாக 2001-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன்முறையாக டென்னிஸ் டிட்டோ என்பவர் சொந்த செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 21 ஆண்டுகள் கழித்து மற்றொரு துணிச்சலான சாகசத்தில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார். 82 வயதுடைய டிட்டோ, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்துடன் 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளார்.

இதன்படி, 5 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் பயணமே அது. இதில், டிட்டோவுடன் அவரது மனைவி அகிகோ உள்பட மொத்தம் 10 பேர் நிலவு பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், அப்போது டிட்டோவுக்கு 87 வயது நிறைந்திருக்கும். இந்த முதல் நிலவு பயணத்திற்கு முன்பு, ஸ்டார்ஷிப் விண்கலம் தடையின்றி பயணம் செய்வதற்கான பல பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

இதுபற்றி டிட்டோ கூறும்போது, பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையுடன், முதியவர் என்ற சாதனையையும் படைத்தவர் ஜான் கிளென். அவருக்கு வயது 77. அவரை விட நான் 10 வயது மூத்தவன் என கூறியுள்ளார். அதனால், வயது சாதனைக்கு ஒரு தடையல்ல என்று நிரூபிப்பதற்கான முயற்சியில் டிட்டோ தயாராகி வருகிறார்.

Join Our WhatsApp Group