- இளைஞரின் உடல் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு
- இ.தொ.கா. தொடர்ந்து அழுத்தம்
நமுனுகல, கனவரெல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இ.தொ.காவின் தொடர் அழுத்ததினால் 5ஆவது நாளான இன்று (13) இச்சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட நிர்வாகத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாளையதினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்த போதிலும், தோட்ட நிர்வாகத்திடமிருந்து நியாயமான தீர்வு எட்டப்படாமையால், அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்படாமல் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் தொழிற்சாலையில் பலவந்தமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது குறித்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பூதவுடல் தொழிற்சாலையிலிருந்து இளைஞனின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.