கட்சி அரசியலை தள்ளி வைத்து விட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு, திருக்கோணேஸ்வர விவகாரம் தொடர்பில் ஈழத்தமிழர்கள் ஆதரவும், அழுத்தமும் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அடிப்படைவாத சிங்கள பெளத்த சக்தி ஒன்று, அரசு இயந்திரத்தையும் விட பலமாக செயற்படுகிறது. இதை தடுக்கும் சக்தி கூட்டமைப்புக்கு கிடையாது. இந்தியாவை தவிர சர்வதேச சமூகத்துக்கு இதுபற்றி அக்கறை எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.