ஈராக்கின் பாக்தாத் அருகே இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு: 8 பேர் படுகாயம்.

0
32

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உள்பட 8 பேர் பலத்த காயம் அடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக பொதுமக்களின் கார் ஒன்று வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டபோது முதல் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நான்கு பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர், மற்றொரு வெடிகுண்டு வெடித்ததில் மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்