இரட்டைக் கொலை: சந்தேகநபர்கள் பயன்படுத்திய சிம் அட்டைக்கு சொந்தக்காரர் கைது.

0
27

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மொரட்டுவையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (12) மாலை மொரட்டுவை, எகொட உயன பகுதியில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்திய இரண்டு கையடக்கத் தொலைபேசிகளில் காணப்பட்ட சிம் அட்டைகள் குறித்த இளைஞர் தனது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞனே இவ்வாறு சிம் அட்டைகளை கொள்வனவு செய்து, குற்றவாளிகளுக்கு கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் போது கொலைச் சந்தேகநபர்கள் பயன்படுத்திய 2 கையடக்கத்தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞனை இன்றையதினம் (13) மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்