80-வது பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப்பச்சனை வாழ்த்திய ரஜினி.

54

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள்.

அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”சகாப்தமாக இருப்பவர். என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியவர். நமது புகழ்பெற்ற இந்தியத் திரையுலகின் உண்மையான சூப்பர் ஹீரோ 80-வது வயதில் நுழைகிறார். எனது அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய அமிதாப்பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

பிக் பீ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அமிதாப்பச்சன் 1969-ல் வெளியான சாட் ஹிந்துஸ்தானி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருதை பெற்று புகழ் பெற்ற நடிகராக உயர்ந்தார். இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

மும்பை ஜூஹூ பகுதியில் இரண்டு மாடியில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு உள்ள பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். ஆண்டுக்கு ரூ.60 கோடி சம்பாதிக்கும் அமிதாப்பச்சனுக்கு ரூ.3,500 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Join Our WhatsApp Group