2வது டி20 போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

0
49

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தொடரின் 2வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ண்யிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மலான் 82 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 44 ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டும், ஜாம்பா 2 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆதிரேலியா அணி களம் இறங்கி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்