வெள்ளவாய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சீல்: நிரந்தரத் தடை வருமா?

31

முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ள லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு உள்ளிட்ட பல குளறுபடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அதிகாரசபை, எடை அளவீடுகள் திணைக்களம் இணைந்து கடந்த 5ஆம் திகதி விசாரணைகளை மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டது.

Join Our WhatsApp Group