முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவின் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி தனது முடிவை அறிவிக்க உள்ளது. அதற்கமைய, குறித்த முறைப்பாடு மீதான விசாரணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் மனுதாரர் மைத்ரிபால சிறிசேனவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்தது. புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.