வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. இன்று (12) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்துள்ளது. இதன்போது, மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.