“எங்களுக்கு 1இலட்சம் ,2 இலட்சம் தேவையில்லை. எதிர்த்து போராடி இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறோமென” வடக்கு,கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் நிதிக்காக போராடவில்லை நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். சர்வதேசத்திடம் ஒரே ஒரு கோரிக்கை தான் விட்டிருக்கின்றோம். அதாவது இந்த இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலே பாரப்படுத்தி எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதாகும்.
இந்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எம்மையும் ,சர்வதேசத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. தெற்கில் ஆட்சி மாற்றத்துக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இது ஜெனிவாவின் 51 ஆவது கூட்டத்தொடரிலே பெரிதாக பேசப்பட்டிருக்கின்றது ஆனால் தமிழ் இனம் அழித்தொழிக்கப்பட்டு 13 வருடத்தினை அடைந்திருக்கிறது .இனியும் இந்த தமிழ் மக்களை ஏமாற்றாமல் நாம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இந்த இலங்கை அரசாங்கத்தினை ஏன் சர்வதேச சமூகம் இன்னமும் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தாமல் இருக்கிறது.
இந்த உறவுகளைத் தொலைத்து இன்று வீதியில் 13 வருட காலமாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் 2018 இலிருந்து கூட்டத் தொடருக்கு சென்று சாட்சியங்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் இதுவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ,தமிழ் மக்களுக்கு நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்தவர்களையும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கொடுக்காமல் இந்த காலக்கெடுக்கில் எங்களை சந்திப்பதாக கூறியிருக்கிறார்கள்.
எங்களுக்கு இந்த ஜனாதிபதி ஆணைக்குழும் தேவையில்லை .எந்த ஆணைக்குழுவாலும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை உள்ளக பொறிமுறைகள் தேவையில்ல என்று எத்தனை காலமாக போராடிக்கொண்டிருக்கிறோம் .எனவே சர்வதேசம் தலையிட்டு ,சர்வதேச பொறிமுறை ஊடாக இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பார்ப்படுத்த வேண்டும் .எங்களுக்கான சர்வதேச நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் என்று கூறிக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.