“நன்வமு லங்கா”: தொழில் முயற்சியாளர்களுக்கு இயந்திரங்கள் வழங்கி வைப்பு !

28

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் “நன்வமு லங்கா” தொழில் முயற்சி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களின் தொழில்துறையினை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் (11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வே. ஜெகதீசன், அதிதிகளாக  நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம்.ஆசிக், காரைதீவு  உதவிபிரதேச செயலாளர்  எஸ். பாத்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினால் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பயனாளிகளும்  கலந்து கொண்டனர்.

Join Our WhatsApp Group