நடிகர் விஜய் படத்தை தயாரிக்கும் டோனி…?

0
63

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இப்போது டோனி புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் படங்கள் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘டோனி எண்டர்டெயின்மென்ட்’ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் 70வது படமான ‘தளபதி 70’ படத்தை டோனி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. டோனிக்கு ‘7’ விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மகேஷ் பாபு ,சுதீப் உள்ளிட்டோரின் படங்களையும் டோனி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்