ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம்.

19

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தனத ட்விட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டுள்ள சொல்ஹெய்ம் இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன். பசுமைப் பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் காலநிலை பற்றிய தலைமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது! (மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி) மொஹமட் நஷீட் உடன் இணைந்து, சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group