இராகலை – ஹய்பொரஸ்ட் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் ஆறு அடி சிறுத்தை புலி (படங்கள்)

24

இராகலை – ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று (11.10.2022) உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் விவசாய காணி ஒன்றின் அருகில் காணப்படும் தேயிலை மலையையொட்டிய பற்றை காட்டுக்குள் இந்த சிறுத்தை புலி  கம்பி ஒன்றினால் தனது கழுத்து இறுகி உயிரிழந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்டுள்ளதாக ஹய்பொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேலும், விவசாய காணிக்கு சென்ற விவசாயி ஒருவர் சிறுத்தை புலி உயிரிழந்து கிடந்ததை  கண்டுள்ளார்.இதையடுத்து இவ்விடயத்தை ஹய்பொரஸ்ட் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஹய்பொரஸ்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
 
அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தோட்ட பொது மக்களின் உதவியுடன் சிறுத்தை புலியின் உடலை மீட்டு மரண பரிசோதணைக்காக திணைக்களத்திற்கு எடுத்து சென்றனர்.
 
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுத்தை புலி ஆறு அடி நீளத்தை  கொண்டதாகவும் சுமார் 150 கிலோ எடை கொண்ட ஆண் சிறுத்தை புலி எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group