பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் 42 மாணவர்கள் திடீர் சுகயீனம் : வைத்திய சாலையில் அனுமதி.

32

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தரம் 6 முதல் 11 ஆம் வகுப்புரையான 13 மாணவர்களும், 29 மாணவிகளுமே மயக்கம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் தங்கியிருந்து சிகிச்சைப்பெறுவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெறுவதாகவும், மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
 
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு நேற்றும் (10.10.2022) குறித்த நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர்கள் நேற்று (10.10.2022) மாலை கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Join Our WhatsApp Group