சாரதி அனுமதிப்பத்திரம் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்: அமைச்சரவை அனுமதி.

30

தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதன்படி, சிப் கொண்ட தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Join Our WhatsApp Group