சமூகச் சீரழிவின் பேரவலம் : போதை மாத்திரைகளுக்காக வைத்திய அதிகாரியை தாக்கிய இளைஞன்.

13

அநுராதபுரம் பதவிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது  இம்மாதம் 19 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்கும்படி கெப்பித்திகொள்ளாவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் பதவிய யாய 12 பகுதியை வசிப்பிடமாக கொண்ட போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. வைத்திய அதிகாரியுடய தனியார் வைத்திய மத்திய நிலையத்திற்கு சென்று போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் கூடுதலாக பாவிக்கும் போதை மாத்திரைகள் சிலவற்றை எழுதித்தரும்படி கோரியதாகவும் அதற்கு வைத்தியர் மறுப்பு தெரிவித்த காரணத்தினால் சந்தேக நபர் வைத்தியரை  தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
( நன்றி- தமிழன் )

Join Our WhatsApp Group