கோப்பாய் செல்வபுரம் பகுதியில் போதை பொருள் வியாபாரி  கைது.

0
25

நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தில் போதை  பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போலீசாரினால் தேடப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்று மாலை கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தின் சந்தியில் வைத்து 5கிராம் 400மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடையகோப்பாய்  செல்வபுரத்தைச் சேர்ந்த குறித்த நபர் நீண்ட காலமாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய்பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்விய ங்காட்டு சந்திப் பகுதியில் 1கிராம் 400மில்லிகிராம் ஹேரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபர் நல்லூர் அபகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் எற  தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்டவர்  விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முட்படுத்தப்பட உள்ளனர்,

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்