காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கான நிதியுதவி 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு.

0
26

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் தற்போது குறித்த தொகையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்