கட்டட நிர்மாணப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ – ஒருவர் உயிரிழப்பு.

0
24

மிரிஹானை-எதுல்கோட்டை சந்தியில் உள்ள கட்டட நிர்மாணப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (11) காலை ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லக்ஷ்மன் சரத் குமார என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தின் போது, ​​குறித்த நபர் விற்பனை நிலையத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், தீயினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அப்பகுதியில் உள்ள கடைகளில் கூலித் தொழிலாளி என்றும், உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கடைக்காரர் அவருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் நுளம்புச் சுருளா அல்லது மின் கசிவா? என்பது உறுதியாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் விற்பனை நிலையத்திற்கு ஏற்பட்ட நட்டம் இதுவரை மதிப்பிடப்படாத நிலையில், கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. கோட்டே மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மின்சார சபை அதிகாரிகளும் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்